கணனியில் விளையாடித்திரியும் அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல்….!

அரசின் பல நிறுவனங்கள் தங்கள் சக ஊழியர்களுடன் சாப்பிட்டு குடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் அல்லது கணினிகள் அல்லது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி பல்வேறு விளையாட்டுகளில் நேரத்தை செலவிடுவதைப் கண்டறிந்துள்ளன.

அவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

நிதியமைச்சகத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 30 முதல் 40 சதவீத அரச ஊழியர்கள் தங்கள் நேரத்தை வீணாக செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு,உறக்கநிலையில் இருப்பவர்கள் மற்றும் கடமைகளில் பங்களிப்பு செய்யாதவர்களை இனங்கண்டு, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நிறுவனங்களின் தலைவர்களுக்கு சிறப்புப் பொறுப்புகள் வழங்கவும், அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றாத தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அனைத்து அரச ஊழியர்களும் தமது கடமைகளில் தீவிரமாக பங்களிப்பது மிக முக்கியம்.

சில நிறுவனங்களில் உள்ள சூழல் கட்டமைப்பு ரீதியாக இத்தகைய செயலற்ற நிலைக்கு உகந்ததாக காணப்படுகிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற நிறுவனங்கள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

பணியாளர்கள் தமது கடமைகளுக்கு இயன்றளவு பங்களிப்பை வழங்குவதை உறுதிப்படுத்துவது நிறுவனத் தலைவரின் பொறுப்பாக இருக்க வேண்டும் என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ள மொத்த அரச ஊழியர்களின் எண்ணிக்கை 1.6 மில்லியனுக்கும் அதிகமாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஇறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு…..!
Next articleஇலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு பாதிப்பு…..!