யாழ் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் மரணம்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக மொனராகலை-சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி, உயிரிழந்துள்ளார்.

மொனராகலை மரக்கலையை சேர்ந்த தில்காந்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை மேற்கொண்டார். அதன் பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார்.

இதேவேளை ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியதன் மூலம் தில்காந்தி மலையகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன் செய்தி வாசிப்பு மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தல் போன்ற துறைகளிலும் அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்தபோதே தமது திறமையை அவர் வெளிப்படுத்தியிருந்தவர் ஆவார்.

இந்நிலையில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்லரும் இரங்கல்களை கூறிவருகின்றனர்.

Previous articleதந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த 15 வயது மகன்! அதிர்ச்சி சம்பவம்
Next articleதிடீரென வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா!