யாழில் மாயமான பிரபல வர்த்தகரின் மனைவி….!

யாழில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மனைவி, கணவரின் துன்புறுத்தல் தாங்காது 3 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2 பிள்ளைகளின் தாயாரான 41 வயதான தாய் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மனைவிக்கும் இளைஞர் ஒருவருக்கும் நட்புள்ளதாக பொலிஸாரிடம் குறித்த வர்த்தகர்முறைப்பாடு வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பெண் காணாமல் போன மறு நாள் பொலிசார், பிரதேசசெயலகத்தில் கடமையாற்றுவதாக கூறப்படும் அந்த இளைஞரிடம் சிவில் உடையில் சென்று சந்தித்துள்ளனர்.

அதன் பின்னர் இளைஞனை விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே இளைஞன் வர்த்தகரின் மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின்னர் அங்கு நின்ற பொலிசாருக்கு வர்த்தகரின் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதன்போது தான் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற முயல்வதாகவும் தனது கணவன் கடும் சந்தேகம் காரணமாகவே வீட்டிவிட்டு வெளியேறியதாகவும் அப்பெண் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு கணவர் அடித்துத் துன்புறுத்துவதாகவும் தெரிவித்த அப்பெண், அதன் காரணமாகவே வர்த்தகரிடமிருந்து பிரிந்து சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வர்த்தகருக்கு பொலிஸ் மேலிடத்தில் உள்ள செல்வாக்கு காரணமாக பொலிசார் மனைவியைக் காணவில்லை என்ற கோணத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் என்ன நடந்திருந்தாலும் நேரடியாக பொலிஸ் நிலையத்துக்கு வந்து விளக்கத்தைத் தருமாறு மனைவிக்கு பொலிசார் அறிவுறுத்தியதுடன், குறித்த அரச ஊழியரான இளைஞனையும் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்புக் கடிதம் கொடுத்துச் சென்றுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

மேலும் குறித்த பெண்ணும், அந்த இளைஞனும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்றும் ஆச்சிரமம் ஒன்றில் சந்தித்த அறிமுகம் உள்ளதாக கூறப்படும் நிலையிலேயே வர்த்தகர், இருவருக்கும் நட்புள்ளதாக பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஇங்கிலாந்தில் சாதனை படைத்த இலங்கை தமிழ் மாணவர்கள்!
Next articleயாழ் கடற்கரையில் கரையொதுங்கும் மர்மச் சடலங்கள்!