ஐபிஎல் எலத்தில் இலங்கை வீரருக்கு கிடைத்த பாரிய தொகை!

பெங்களூருவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்கா ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எலத்தில் எடுத்துள்ளது.

இலங்‍கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கைகுரிய வீரராக வலம் வரும் வனிந்து ஹசரங்க பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என சகல துறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகிறார்.

ஐ.சி.சி.யின் சர்வதேச இருபதுக்கு 20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 797 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கும் வனிந்து, ஐ.சி.சி.யின் இருபதுக்கு 20 சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரவரிசையில் 5 ஆவது இடத்திலும் உள்ளார்.

Previous articleபுத்தளத்தில் அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் சிக்கிய நபர்!
Next articleதிடீரென முடங்கிய டிவிட்டர் கணக்குகள்! அதிர்ச்சியடைந்த பல கோடி பயனாளர்கள்