கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவியின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக !


பதுளை ஹாலி எல – உடுவர மேற்பிரிவு பிரதேசத்தில் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட மாணவியின் பூதவுடல் இன்று (10-03-2022) வியாழக்கிழமை அன்னாரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த கொலை சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (08-03-2022) இடம்பெற்றுள்ளது

உயிரிழந்த மாணவியின் மரணத்துக்கு நீதி கோரி அவர் கற்ற பாடசாலையான ஹாலிஎல வீதியில் ஊவா மாகாண ஆசிரியர் சங்கத்தால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த மாணவியின் இறுதிக் கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (11-03-2022) இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவியின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக !
Previous articleஉலக நாடுகளுக்கு பகீரங்க மிரட்டல் விடுத்துள்ள ரஷ்யா!
Next articleயாழில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி !