காலி முகத்திடலில் அரசுக்கெதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர்!

காலி முகத்திடல் பகுதியில் தற்போது பெருந்திரளான இளைஞர், யுவதிகள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேசியக்கொடிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Previous articleமின்வெட்டு நேரங்கள் குறைப்பு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
Next articleஅரிசியின் விலை அதிகரிப்பு குறித்து நுகர்வோர் தெரிவித்த கருத்து