மிரிஹான போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த நபரை தேடும் பொலிஸார்

மிரிஹானவில் கடந்த மார்ச் 31ஆம் திகதி வாகனங்களுக்கு தீ வைத்த சந்தேகநபரை அடையாளம் காண பொது மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது வாகனங்களுக்கு சந்தேகநபர் தீ வைக்கும் சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தது

இந்த நிலையில் அந்த காட்சிகளும், சந்தேகநபரின் அடையாள ஓவியமும் வெளியிடப்பட்டு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 071-8591755 அல்லது 011-2444265 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநாட்டில் இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக இராணுவ ஆட்சியும் ஏற்படலாம் – இரா.சாணக்கியன்
Next articleகோட்டாபயவின் திடீர் அழைப்பு: இன்று மாலை விசேட பேச்சுவார்த்தை