வவுனியாவில் பாலடைந்த கிணற்றில் விழுந்து சிறுவன் பலி


வவுனியா – மதுராநகர் பகுதியில் கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த கனசுந்தரம் சம்சன்(10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் அருகில் காணப்பட்ட கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்ட போது தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் துணையுடன் மீட்கப்பட்ட போதும் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளாதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Previous articleமுகக்கவசம் அணிவது அவசியமில்லை: புதிய சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
Next articleவவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள வீட்டிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு