மீண்டும் அதிகரித்தது சீமெந்தின் விலை!எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையைில், சீமெந்தின் விலைகளை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

50 கிலோ எடை கொண்ட ஒரு சீமெந்து பொதி தற்போது சந்தையில் 2 ஆயிரத்து 300 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 350 ரூபாய் வரையான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சீமெந்தின் புதிய விலையானது 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் கூறியுள்ளனர்.

சீமெந்து விலைகள் அதிகரிக்கப்பட்டமை காரணமாக சந்தையில் அதற்கான கேள்வி குறைந்துள்ளதுடன் புதிதாக கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவது குறைந்துள்ளது.

இதன் காரணமாக விற்பனை நிலையங்களில் சீமெந்து தொகையாக களஞ்சியப்படுத்தப்படுவதில்லை எனவும் சீமெந்து விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக அத்தியவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

மீண்டும் அதிகரித்தது சீமெந்தின் விலை!
Previous articleதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மகள் விடுத்த கோரிக்கை!
Next articleஅரசாங்கத்திற்கு எதிராக 100அடி மரத்தில் ஏறி நபர் போராட்டம் (Photos)