கோட்டா கோ கம என்னும் போராட்டக்களத்தில் தொலைக்காட்சிச் சேவை

காலி முகத்திடல் ‘கோட்டாகோகம’ போராட்ட களச்செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில், ஒன்லைன் தொலைக்காட்சிச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதன் ஒளிபரப்பு நடவடிக்கைகள் இடம் பெறும் விதம் தொடர்பான புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்கள் வழியாக பரிமாறப்பட்டு வருகின்றன. அர்சாங்கத்துக்கு எதிரான காலிமுகத்திடல் போராட்டக் களம் இன்றளவில் முழு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

“கோட்டாகோகம” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போராட்டக் களத்தில் நாளாந்தம் நடைபெறும் மாற்றங்களே இதற்கு காரணமாகும்.

இதற்காகவே பொதுமக்கள் பலரும் காலிமுகத்திடலுக்கு பெரும் ஆர்வத்துடன் வந்து, அராசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் கலந்து கொள்கின்றனர்.

Previous articleஅரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்த பொலிஸாருக்கு நேர்ந்த நிலை
Next articleஇலங்கை வந்தது இந்தியாவின் மற்றுமொரு எரிபொருள் கப்பல்