இலங்கை வந்தது இந்தியாவின் மற்றுமொரு எரிபொருள் கப்பல்

இந்திய அரசாங்கத்தின் எரிபொருள் ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானி கராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு குறித்த கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.

அதேவேளை , நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் இலங்கைக்கு இந்தியா இதுவரை சுமார் 440,000 மெற்றிக் தொன் பல்வேறு வகையான எரிபொருட்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகோட்டா கோ கம என்னும் போராட்டக்களத்தில் தொலைக்காட்சிச் சேவை
Next articleபெற்றோர்கள் கூறியதை மீறி ஏரிக்கு சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!