அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களால் மேற்கொள்ளபட்ட உள்ளாடை போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஸ்தாபிக்கப்பட்ட ‘ஹொரு கோ கம’ என்ற போராட்டக் களத்தில் இன்று வித்தியாசமான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளைக் கொண்ட வேலிகளில் உள்ளாடைகளைக் காட்சிப்படுத்தி அந்த உள்ளாடைகளில் ‘கோ ஹோம் கோட்டா’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் போராட்டம் இடம்பெறுகின்றது.

புதிதாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டக் களத்துக்குப் பெருந்தொகையான வெளியாட்கள் உணவுப் பண்டங்களையும் தண்ணீர்ப் போத்தல்களையும் மற்றும் மருந்து வகைகளையும் கொண்டு வந்து கொடுத்து உதவி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே உள்ளாடைகளைக் காட்சிப்படுத்தி இந்தப் போராட்டத்தைப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleக.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்
Next articleநடத்துனரிடம் ஒரு ரூபா குறைவாக கொடுத்ததால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான முதியவர்