நான்காவது கொரோனா தடுப்பூசி நடவடிக்கை திங்கள் முதல் ஆரம்பம்

நான்காவது கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நான்காவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இவர்களைத் தவிர 20 முதல் 60 வயதிற்குட்பட்ட, எதிர்ப்பு சக்தி குறைவடைந்தவர்களுக்கும், நாட்பட்ட நோயாளர்களுக்கும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டிலுள்ள 12 முதல் 16 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதனது உண்டியலில் சேகரித்த பணத்தை இலங்கை மக்களுக்காக வழங்கிய தமிழக சிறுமி
Next articleயாழில் இருந்து இந்தியா செல்ல முயன்ற பெண்கள்: கடலில் ஒரு சுற்றுசுற்றிவிட்டு இலங்கை கரையிலேயே இறக்கி விட்ட ஏமாற்று மாலுமிகள்: 12 பேர் கைது!