ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் திகதி நீட்டிப்பு

புதிதாக வெளியான செய்தி:

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுகின்றது. 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நாளை (10) அதிகாலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில்  இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

  

Previous articleமகிந்தவின் ஆதரவாளர்களை ஆற்றில் தூக்கி வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் (வெளியான வீடியோ ஆதாரம்)
Next articleஅடுத்த பிரதமர் யார் : ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல்