எரிபொருள் விநியோகம் மீண்டும் தடைப்படலாம் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் ஏற்றிச்செல்லும் லொறிகளை சில குழுக்கள் அச்சுறுத்தி வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பயணிக்கும் லொறிகளை மடக்கிப் பிடித்து, அங்குள்ள எரிபொருள் நிலையங்களில் தரையிறக்குமாறும், அவ்வாறு இல்லையென்றால் லொறிகளுக்கு தீ வைப்பதாக சில குழுக்கள் அச்சுறுத்தி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுமானால் போக்குவரத்து ஊழியர்களின் நலன் கருதி எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous articleகொழும்பில் “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் இருந்து கிளம்பிய குடும்பஸ்த்தர்
Next articleயாழில் ஆசிரியர் அறைந்ததால் மாணவர் ஒருவருக்கு செவிப்பறை பாதிப்பு !