இலங்கைக்கு மருத்துவ உதவி வழங்கிய சீனா!

சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துத் தொகுதி ஒன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன் மதிப்பு சுமார் 500 மில்லியன் யுவான் என சீன தூதரகம் டுவிட்டர்யில் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் 2 கட்டங்களாக இலங்கையை வந்தடையவுள்ளன.

அதன் முதல் தொகுப்பில் 10 மில்லியன் யுவான் மதிப்புள்ள Enoxaparin Sodium ஊசிகள் 256,320 உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது மருந்துத் தொகுதி இம்மாத நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleதன்னைத்தானே திருமணம் செய்ய ரெடியாகும் இளம் பெண்!
Next articleஅரச ஊழியர்களுக்கு வழங்கி வந்த பாடநெறிகள் இடைநிறுத்தம்!