இலங்கையில் நாளை முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை!

இலங்கையில் இனிமேல் முகக்கவசம் கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளில் முகக்கவசம் அணியும் முறை நாளைமுதல் கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே
இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுவாசப் பிரச்சனை உள்ளவரகளுக்கு முகக்கவசம் பரிந்துறைக்கப்படுகிறது.

அதற்கமைய, நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்த தடையும் இன்றி அதனை அணிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முகக் கவசம் அணியும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டது.

Previous articleஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் : தொடர்பில் வெளியான தகவல்
Next articleவவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் திடீரென பரவிய தீ!