பொருளாதார நெருக்கடியால் பாடசாலை நாட்களை குறைக்க தீர்மானம் !

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாடசாலை நாட்களை குறைக்க கல்வி அதிகாரிகள் தீர்மானத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்ப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் இன்று (10) கல்வி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க கருத்து தெரிவித்துளளார்.

இச்சந்திப்பில் பாடசாலை நாட்களை மட்டுப்படுத்துவது தொடர்பான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படும்.

பலருக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், எரிபொருள் நெருக்கடி பாடசாலை பிள்ளைகள் மீது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்திதுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleஇலங்கை அகதி என நாடகமாடிய இலங்கைத்தமிழரை கைது செய்த தமிழ்நாட்டு பொலிஸார்!
Next articleசவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிக்கும் முக்கிய ராசிக்காரர்கள்: மூன்று ராசிக்காரர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !