ஆதிசிவன் சிலையை இடித்து புத்தர் சிலையை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட பிக்குகள்!

முல்லைத்தீவு – குருந்தூர் பகுதியில் ஆதிசிவன் சிலையை இடித்து புத்தர் சிலையை வைக்கும் நடவடிக்கையில் பிக்குகள்
ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் ஆதிசிவன் கோவிலை இடித்து அகற்றப்பட்டதுடன் அதில் பிக்குகள் புத்தர் சிலை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்செயலை தடுத்து நிறுத்த முயன்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின் முதுகில் குத்தி மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் பிக்குகள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் பிக்குகளின் செயற்பாட்டிற்கு குருந்தூர் மலைப்பகுதியில் ஒன்றுகூடுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleரஷ்யாவிடம் இலங்கை எரிபொருள் பெறவேண்டிய நிர்ப்பந்தம் !
Next articleஅரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!