கிளிநொச்சியில் மீட்கப்பட்ட அரிய வகை நட்சத்திர ஆமை !

கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது குறிதத் ஆடை அடையாளம் காணப்பட்டுள்ளது, குறித்த ஆமை பிரதேசத்தில் காணப்படும் ஆமை இனங்களிடமிருந்து வேறுபட்டமையால் குறித்த ஆமை தொடர்பில் இணையத்தளத்தில் தேடியுள்ளனர்.

குறித்த ஆமையானது அருகிவரும் நட்சத்திர ஆமை வகையை சேர்ந்தது என அவர்கள் அடையாளம் கண்டதை அடுத்து அதனை பாதுகாக்கும் நோக்குடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரை அழைத்து அவர்களிடம் குறித்த ஆமையை பாதுகாதப்பாக கையளித்துள்ளனர்.

குறித்த ஆமையினை கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதுடன், ஆமையினை பாதுகாப்பாக பெற்ற சென்றுள்ளனர். குறித்த ஆமையானது இலங்கைஃ, இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு உருத்துடையவைகள் எனவு்ம, கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் அரிய வகையான ஆமை இனம் எனவும் தெரியவருகின்றது.

குறித்த ஆமையானது ஏனைய ஆமைகளோடு ஒப்பிடுகையில், நட்சத்திரத்தை உடலில் தாங்கிய ஆமை இனமாகும். இவை தற்போது அழியும் நிலைக்கு சென்றுவிட்டது. உலகளவில் அதிகம் கடத்தப்படும் உயிரினங்களில் இந்த நட்சத்திர ஆமை இனமும் ஒன்றாகும்.

காண்பவரை கவரும் இந்த ஆமை வகை இந்தியா, இலங்கை, பாகிஸ்தானில் காணப்படும் உயிரினமாகும். இந்த நட்சத்திர ஆமைகள் இந்திய மற்றும் இலங்கை கடற்கரை பகுதிகளில் அதிகளவில் உள்ளன. உலகம் முழுவதும் ஆமை வளர்ப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் இந்த ஆமைகள் அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆமைகள் சீனா, ஹாங்காங், தாய்லாந்து பகுதிகளில் மருந்து தயாரிப்புக்காகவும் மற்றும் வீட்டில் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. நட்சத்திர ஆமைகளின் ஓடுகளுக்கு மருத்துவக் குணம் இருப்பதாக அங்கு நம்புகின்றனர்.

ஆமையின் ஓட்டினை பொடியாக்கி உணவில் கலந்து சாப்பிட்டால், ஆண்மை அதிகரிக்கும் என சீனர்கள் நம்புகின்கின்றனர். இந்தியாவிலுள்ள நட்சத்திர ஆமைகள்தாம் இதில் சிறந்தவை என கூறப்படுகிறது. இதனால் நல்ல விலைக்கு இந்த ஆமைகளை சர்வதேச சந்தையில் வாங்குகிறார்கள்.

இதனால் ஆண்டுதோறும் கடத்தல் சட்ட விரோத வணிகம் அதிகரித்து வருகிறது. ஒரு நட்சத்திர ஆமையின் விலை 500 டொலரில் இருந்து 2 ஆயிரம் டொலர் வரை சர்வதேச சந்தையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறான ஆமையை பாதுகாக்கும் நோக்குடன் பொறுப்புடன் செயற்பட்ட அந்த விவசாயியை பாராட்டியே ஆகவேண்டும்.

Previous articleஎதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 400ரூபாவை தாண்ட வாய்ப்புள்ளது : கரு ஜெயசூரிய
Next articleமாமியாரை எரித்துக்கொன்ற மருமகன் : வெளியான காரணம்!