எரிபொருள் வரிசையில் காத்திருந்து டீசல் என நினைத்து 24,000 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கிய நபர்கள்!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி, டீசல் என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீரை 3 கேன்களில் விற்ற சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது.

அத்துடன் குறித்த 60 லீற்றர் நீர், 24,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துக்கு முகம் கொடுத்தவர் சிறிய லொறியொன்றில் இளநீர் விற்கும் ஒருவர் என்றும் மற்றையவர் சிறிய லொறியொன்றின் சாரதி என்றும் தெரியவந்துள்ளது.

பண்டாரகமயிலிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் குறித்த இருவரும் 5 நாள்களாக காத்திருந்த போது அருகில் இருந்த மற்றொரு நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

பிறிதொரு இடத்தில் திருட்டு தனமாக எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் புதிதாக அறிமுகமான நபர் மற்ற இருவரிடமும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரை நம்பிய இருவரும் 24,000 ரூபாய்க்கு 3 கேன்களில் டீசலை கொள்வனவு செய்து, அதனை தமது வாகனங்களுக்கு ஊற்றிய போதுதான், அது தண்ணீர் என தெரியவந்துள்ளதாகவு கூறப்படுகின்றது

Previous articleகனேடிய சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த நாட்டில் தடுப்பூசி அவசியமில்லை!
Next articleயாழில் பெண் தாதிக்கு ஆண் தாதியரால் தொலைபேசி ஊடாக வந்த கொலை மிரட்டல்!