குளவி தாக்குதலுக்கு இலக்காண பாடசாலை மாணவர்கள்!

குளவி கொட்டிற்கு இலக்கான 15 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் ஆகியோர் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (16) காலை முள்ளிவாய்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலய பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை வளாகத்து மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த ஒரு ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleசுற்றாடல் விஞ்ஞான பரீட்சையில் தேர்ச்சி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
Next articleமீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்பு