மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்பு

ஆற்றில் தோணி ஒன்றில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குடியிருப்பு ஆற்றில் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் மயிலம்பாவெளி துரைச்சாமி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சிறீதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வழமைபோல சம்பவதினமான நேற்று மாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறி மீன்பிடிப்பதற்காக குறித்த ஆற்றில் தோணியில் தனியாக சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடிய நிலையில் இன்று (16) காலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதில் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகுளவி தாக்குதலுக்கு இலக்காண பாடசாலை மாணவர்கள்!
Next articleஇந்தியாவின் கடன் உதவியால் இலங்கைக்கு கிடைத்த கடைசி டீசல்!