தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவல்துறை உத்தியோகத்தர்!

கண்டி – ஹசலக காவல்துறை பிரிவுக்குட்பட்ட மினிப்பே கால்வாயில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண்ணொருவர் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

காவல்துறை உத்தியோகத்தர் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் உதவியுடன் குறித்த பெண்ணை மீட்டு ஹசலக்க வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

குறித்த பெண் பரவர்தனமய பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleஇந்த பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் அடுத்த வாரம் விடுமுறை !
Next articleஎரிபொருள் பாரவூர்தியை நிறுத்தி எரிபொருள் வாங்கும் பெண்!