மலையகத்தில் காணாமல் போன சிறுவன் மீட்பு!

நுவரெலியா – நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தில் காணாமல்போயிருந்த 12 வயது மாணவனான மகேந்திரன் ஆசான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் (17-06-2022) காலை முதல் காணாமல்போயிருந்த நிலையில் நேற்றிரவு (18-06-2022) நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அயல் வீட்டில் உள்ள நபர் ஒருவரே இச் சிறுவனுக்கு தொழில் பெற்றுத் தருவதாக ஏமாற்றி, நானுஓயாவிலிருந்து ரயில் மூலம் நீர்கொழும்புக்கு அனுப்பியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுவன், நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் இருப்பதைக் கண்ட உறவினர் ஒருவர், அவரைபி பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளார்.

காணாமல்போன சிறுவன் நீர்கொழும்புப் பகுதியில் இருக்கின்றார் என்று நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் ஊடாக நானுஓயா பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது.

சிறுவனை நீர்கொழும்புக்கு அனுப்பிவைத்த சந்தேகநபரை கைதுக் செய்வதற்கான நடவடிக்கையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவவுனியாவில் திடீரென இடம்பெற்ற கலவரம்: தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் !
Next articleநடுகாட்டில் மூன்று நாட்களாக சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்த இளைஞன்!!