பெட்ரோல் என சிறுநீரை விற்பனை செய்து தப்பிய நபர்!

நீர்கொழும்பில் எரிபொருளின்றி வீதியில் தவித்த நபருக்கு சிறுநீரை எரிபொருளாக விற்பனை செய்த நபரொருவர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவசர வேலையாக சென்று கொண்டிருந்தவரி மோட்டார் சைக்கிளில் இருந்த எரிபொருள் தீர்ந்து போயுள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு தெல்வத்தை சந்தி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், மோட்டார் சைக்கிளில் எரிபொருளினிற் நின்ற நபரை அணுகி எரிபொருள் தேவையா எனக் கேட்டு தன்னிடம் எரிபொருள் இருப்பதாக கூறியுள்ளார்.

1000 ரூபாய் பணத்திற்கு 375 மில்லி லீற்றர் எரிபொருள் பெற்றுக் கொடுக்க குறித்த நபரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் பெற்றவர், அதனை விற்பனை செய்த நபரிடம் 5000 ரூபாயை கொடுத்து மீதி பணத்தை கோரியுள்ளார். அதனை வழங்காமல் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் அந்த நபரை துரத்தி செல்ல முயற்சித்த போதிலும் மோட்டார் சைக்கிள் இயங்கவில்லை. பின்னரே சிறுநீரை வழங்கி ஏமாற்றியமை தெரியவந்துள்ளது.