பொருளாதார சிக்கலுக்கு இலக்கான நாடுகளில் இலங்கையை அடுத்து இந்தியா : உலக வங்கி எச்சரிக்கை!

கொரோனாவுக்குப் பின்பு வீழ்ந்த முதல் நாடு என்ற பெயரை இலங்கை வாங்கியுள்ளது. இதேபோல் இலங்கையைத் தொடர்ந்து இந்தியா உட்பட பல நாடுகள் வீழ்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியாவின் பொருளாதாரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என உலக வங்கி எச்சரிக்கிறது.

இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கின்றனர்.

இலங்கையில் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்து உலகையே திரும்பி பார்க்கச் செய்திருக்கிறது.

இலங்கையில் மக்களின் போராட்டம் ஓங்கியுள்ளதால். இலங்கை அரசின் கையில் ஏற்கெனவே பணம் இல்லாத காரணத்தால், மாற்று அரசு அமைந்தாலும் உடனடியாகத் தலைநிமிர வாய்ப்பு இல்லை.

பொருளாதார வீழ்ச்சியில் தெற்காசிய நாடுகள், இலங்கை, நேப்பாளம், பாகிஸ்தான்… அடுத்தது யார்… என்பதுதான் இன்றைய நிலை?! அதில் இந்தியாவும் இடம் பிடிக்கும்.

இந்தக் குழப்பத்தை போக்க பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்யப்போகிறார் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த கருத்து சமூக வலைதளங்களின் ஒன்றான முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Previous articleஇலங்கையை வந்தடைய போகும் எரிபொருள் : மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட லங்கா IOC!
Next articleதிடீரென நிலத்திற்குள் வந்த கடலலைகள்!