மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 11 வயது சிறுவன் !

மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது வெல்லவாய கொட்டவெஹெரகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் மல்வத்தவல வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி கற்று வந்த ஆர்.எம்.நுவன் நெத்சர என்ற சிறுவன் என தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவன் உறவினர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் துடைப்பம் அருகே போடப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleகாணமல்போன தனது 15 வயது மகளை கண்டுபிடித்து தருமாறு உயர் மின்கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை!
Next articleயாழில் பாட்டியை கடத்தி தகாத முறையில் ஈடுபட முயற்சித்த 15 சிறுவன் கைது!