குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் : சிறுவர்கள் உட்பட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களை குளவி விரட்டி விரட்டி தாக்கியுள்ளதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று மட்டக்களப்பு வாகநேரி பெட்டைக் குளத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் மீன்பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் வழமைபோல் மீன் பிடிக்க சென்றவர்களை எங்கிருந்தோ வந்த குளவி கூட்டம் விரட்டி விரட்டி தாக்கியது.

இதனையடுத்து குளவியில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள சிலர் தண்ணீரிலும் சிலர் வைத்திருந்த துணியை மறைத்தும் மீன் பிடிக்காமல் தங்களை பாதுகாத்துள்ளனர்.

இதில் 03சிறுவர்கள் மற்றும் 06 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபேருந்து கட்டணங்கள் குறைப்பு : வெளியானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
Next articleயாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் : வெளியான காரணம்!