மகளின் பாடசாலைக்கு முன் தாயை வெட்டி கொலை செய்த தந்தை : வெளியான காரணம்!

மகளின் பாடசபலைக்கு முன் தாயினை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது அனுராதபுரம் – மதவாச்சி, மஹதிவுல்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மனைவியை கொலை செய்து விட்டு சந்தேக நபர் கிருமி நாசினியை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்தையடுத்த கொலை தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபுதுக்குடியிருப்பில் இருந்து தெரிந்த ஆண் நண்பரை நம்பி வீட்டை விட்டு யாழிற்கு வந்த சிறுமிகளுக்கு நடந்த அசம்பாவிதம் !
Next articleமதுபோதையில் 08 வயது சிறுவனை துாக்கி கால்வாயில் வீசிய கிராம சேவகர் கைது!