மதுபோதையில் 08 வயது சிறுவனை துாக்கி கால்வாயில் வீசிய கிராம சேவகர் கைது!

மது போதையில் 08 வயது சிறுவனை தூக்கி கால்வாயில் வீசிய கிராம சேவகரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது பொல்கஹவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் யானை ஒன்று நின்றுள்ளது அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுவனை அங்கு வந்த கிராம உத்தியோகத்தர் தூக்கி கால்வாயில் வீசியுள்ளார்.

இதனால் அச்சிறுவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிராம உத்தியோகத்தர் இன்றையதினம் நீதிமன்றத்திர் முன்னிலைப்படுத்த போவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleமகளின் பாடசாலைக்கு முன் தாயை வெட்டி கொலை செய்த தந்தை : வெளியான காரணம்!
Next articleயாழில் தூக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ சிப்பாய்!