பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து சங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

இன்று (28) தமக்கு தேவையான டீசல் கிடைக்காவிட்டால் நாளை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வாகனங்கள் இயங்காது என பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

இது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

Previous articleஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
Next articleபொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய எச்சரிக்கை !