மீனவ சமூகம் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி!

அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு மின்சார வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

திறைசேரியின் கீழ் சுயாதீனமான தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனத்தை நிறுவுவதற்கான யோசனை முன்மொழியப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மண்ணெண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ சமூகம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Previous articleதொழில் இல்லாதோருக்கு 20 ஏக்கர் காணி! : புதிய சட்டத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி!
Next articleகனடாவில் வீடு வாங்க காத்திருப்பவருக்கு மகிழ்ச்சி செய்தி !