பாடசாலை ஆசியரியர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்!

பாடசாலை ஆசியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக இணைப்பு வசதி கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சினால் இரத்து செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை மீண்டும் அந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கு இடையில் நேற்று கல்வி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது தற்காலிக இணைப்பு வசதி காலத்தை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஇன்று நள்ளிரவு நாட்டுக்கு வரும் கோட்டாபய ராஜபக்ச!
Next articleக.பொ.த உயர்தரத்தில் மேலும் உள்ளடக்கிய பாடம் : வெளியான அறிவிப்பு!