இலங்கையில் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெரும் சோகம்!

இலங்கையில் தனது சகோதரனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய அசேல சுனக சில்வா நேற்று நெஞ்சுவலி காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மறுநாள் அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்காக தயாராகும் வேளையில் அவரது தங்கை அகம்போடி ரங்கி துலாஞ்சனி 31 வயதான சில்வாவும் சடலத்திற்கு அருகில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து, அசேல சுனகவின் மகள், மகன், மைத்துனர் மற்றும் அத்தை ஆகியோர் அதிர்ச்சியின் காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇலங்கையில் காதலியை சந்திக்க பேருந்தை கடத்திய பதின்ம வயது சிறுவன்!
Next articleமலையகத்தை உலுக்கிய இரட்டைக் கொலைச் சம்பவம்!