உள்ளாடைக்கு ஓர்டர் செய்த யுவதிகளிற்கு நேர்ந்த அவதி: 100 இற்கும் மேற்பட்டவர்களின் பேஸ்புக்கிற்குள் நுழைந்த கில்லாடி கைது!

100க்கும் மேற்பட்ட பெண்களின் முகநூல் கணக்குகளை ஊடுருவி அவர்களின் புகைப்படங்களை திருடி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல உத்தரவிட்டுள்ளார்.

பிரபல வர்த்தக நாமங்களில் தயாரிக்கப்படும் பெண்களின் உள்ளாடைகளை விற்பனை செய்யும் போலி பேஸ்புக் பக்கத்தை திறந்து சந்தேகநபர் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளார்.

முகநூல் கணக்குகள் மூலம் பல இளம் பெண்கள் உள்ளாடைகளை வாங்க ஆர்டர் செய்துள்ளனர்.

சந்தேகநபர் சிறுமிகளை தவறாக வழிநடத்தி அவர்களின் பேஸ்புக் கணக்கின் கடவுச்சொற்களை திருடியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதவானிடம் தெரிவித்துள்ளது.

“கடவுச்சொல்லை திருடிய பின்னர், சந்தேக நபர் பேஸ்புக் கணக்குகளை அணுகி, பெண்களிடம் இருந்து தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து அவற்றை வெளியிடுமாறு பெண்களை அச்சுறுத்தினார்” என்று சிஐடி தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏழு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

மேலும் விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.