கிளிநொச்சியை உலுக்கிய கொலை சம்பவம்; சிக்கிய சந்தேக நபர்!

கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 11 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி சிவபுரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.சிவபாலசுப்பிரமணியம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி, உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதையடுத்து, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleமனைவி உறவுக்கு மறுத்ததால் கணவன் செய்த கொடூர செயல் : மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Next articleராணியின் இறுதி நிகழ்வில் சர்ச்சையில் சிக்கிய ஜனாதிபதி : வெளியான புதிய தகவல்!