வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உயிரிழப்பு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரும் ரெலோவின் மத்திய குழு உறுப்பினருமான டி.நடராஜசிங்கம் (ரவி) காலமானார்.

வீட்டில் தன் குழந்தைக்கு ஏணியில் கட்டியிருந்த கயிற்றை விளையாட்டாக கழுத்தில் போட்டபோது இறுகியிருந்தது.

இதனை அவதானித்த குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் முன்னிலையில் இன்று (20-09-2022) மரச்சாமான் ஒன்றின் மேல் நின்று கொண்டிருந்த போது மகனின் கயிறு கழுத்தில் விழுந்தது தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் திருட்டுத்தனமாக ஆட்டோவில் மாட்டினை கடத்திய நபர் : வசமாக சிக்கினார்!
Next articleபணம் அனுப்பாத மனைவி; ஆத்திரத்தில் குழந்தைகளை கொடூரமாக தாக்கிய தந்தை!