இலங்கையில் தீயினால் 80 வீடுகள் எரிந்து நாசம்!

கஜீமாவத்தையில் நேற்று இரவு ஏற்பட்ட பாரிய தீயினால் 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.

தீயினால் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு அப்பகுதி முழுவதும் பரவிய தீ பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது.

தீயை அணைக்க ஏராளமான தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Previous articleதிரிபோஷா குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எடுத்த தீர்மானம்!
Next articleநாட்டில் திடீரென குறைக்கப்பட்ட எரிபொருளின் விலை!