ஆயுதபூஜையால் நடுவிதியில் பூசணிக்காய் உடைப்போருக்க எதிராக நடவடிக்கை!

ஆயுத பூஜையையொட்டி, கடைகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நடுரோட்டில் பூசணிக்காயை உடைத்து கொண்டாடுவது வழக்கம்.

நடுரோட்டில் பூசணிக்காயை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இங்கு இல்லை, இந்தியாவிலேயே இந்த மாதிரி அதிரடி அறிவிப்பு வெளியானது. புதுச்சேரி போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பூசணிக்காய்கள் நடுரோட்டில் உடைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சில நேரங்களில் மரணம் தவிர்க்க முடியாததாகிவிடும்.

எனவே, நடுரோட்டில் பூசணிக்காய் உடைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வீதியில் வைக்கப்பட்டுள்ள பூசணிக்காய்களால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇரகசியமாக அரசியலில் நுழைந்த கோட்டாபய ; வெளியான விபரம்!
Next articleயாழ். கடற்கரையில் கரையொதிங்கிய ஆண் ஒருவருடைய சடலம் : விசாரணைகள் தீவிரம்!