தேசிய மட்ட அளவில் சாதனை படைத்த வவுனியா மாணவிகள்!

நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று வவுனியா பாடசாலை மாவட்டங்கள் சாதனை படைத்துள்ளன.

கல்வி அமைச்சின் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்படும் 2022 தேசிய மட்ட குத்துச்சண்டை தேசிய போட்டி (21 முதல் 24 வரை) கண்டி நாவலப்பிட்டியில் உள்ள ஜயதிலக விளையாட்டரங்கில் 4 நாட்கள் நடைபெற்றது.

இப்போட்டியில் வவுனியா பாடசாலைகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்யாலயா மாணவிகள் எல்.கஜேந்தினி (57) கிலோ பிரிவில் தங்கப் பதக்கமும் (முதல் இடம்), யு.கீர்த்தனா (60) கிலோ பிரிவில் தங்கப் பதமுக்கம் (முதல் இடம்) பெற்றனர்.

இதேபோல் சுந்தராபுரம் சரஸ்வதி வித்யாலயா மாணவி எம்.வலசிகா (54) கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.

பயிற்றுவிப்பாளர் நிக்சன் ரூபராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த மாணவர்கள் தேசிய குத்துச்சண்டை போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றுள்ளனர்.

Previous articleயாழில் தீபாவளி அன்று கிணற்றுக்கட்டில் விளையாடிய இளைஞர் தவறி விழுந்து பலி : அவரை காப்பாற்ற கிணற்றுக்குள் பாய்ந்த நணபனும் பலி!
Next articleயாழில் திடீரென கழமிரங்கிய விசேட படையினர் : வெளியான காரணம்!