இலங்கையில் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகரமான பொருட்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.

அழகு நிலையங்கள் மூலம் பெரும்பாலான பெண்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்று (29-10-2022) குளியாப்பிட்டியவில் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அவர், பள்ளி மாணவர்கள் தவறான பொருட்களை வேண்டாம் என்று சொல்லும் நிலையில் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், அதிகமான பெண்களிடையே ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

குறிப்பாக குருநாகல் மாவட்டத்திலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அழகு நிலையங்கள் மூலம் பெண்கள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்.

அழகு நிலையங்களுக்கு அடிக்கடி செல்லும் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டுமென தேசிய அபாயகரமான பொருட்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மி நிலங்க தெரிவித்துள்ளார்.

Previous articleயாழ். பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு!
Next articleவழமைக்கு திரும்பிய மலையக தொடருந்து சேவை!