எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு !

எரிபொருட்களின் விலையில் இந்த வாரத்தில் மாற்றம் ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எரிபொருட்களின் விலையில் மாதந்தோறும் இரண்டு தடவைகள் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி, ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் எரிபொருள் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous article“விண்வெளியில் பார்ன் மூவி எடுக்க எலான் மஸ்க் உதவ வேண்டும்”- ஜானி சின்ஸ் வைத்த சர்ச்சையான கோரிக்கை !
Next articleகிளிநொச்சியில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைது!