கிளிநொச்சியில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது கிளிநொச்சி – பளை முகாவில் கிராமத்தில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வாள் ஒன்றும் இந்திய துப்பாக்கி ஒன்றும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

தேடுதலின் போது சந்தேகநபரிடம் இருந்து வாள் ஒன்றும் இந்திய துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (02.11.2022) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleஎரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு !
Next articleயாழில் வீடொன்றின் கட்டிலுக்கடியில் இருந்து பிடிபட்ட இளைஞன் : விசாரணைகள் தீவிரம்!