இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பரபரப்பு சம்பவம்: கணவன் – மனைவி உயிரிழப்பு!

மொனராகலையில் வாய் தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொனராகலை மாவட்டம் – படல்கும்புரை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதைப் பார்த்த கணவர் ரப்பர் பால் கத்தியை எடுத்து கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். தீக்குளித்த மனைவி சிகிச்சை பலனின்றி நேற்று (03-11-2022) உயிரிழந்துள்ளார்.

மனைவி இறந்த மறுநாள் கணவர் சிகிச்சை பலனின்றி இன்று (04-11-2022) உயிரிழந்தார்.

படல்கும்புரை ரப்பர் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரியும் ஆர். M. 57 வயதான கணவர் நந்தசேன மற்றும் அவரது மனைவி 56 வயதான R. M. மல்லிகா ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் படல்கும்புரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுனில் திஸாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Previous articleஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் !
Next articleவவுனியாவில் விபத்துககுள்ளான பேருந்துகளை அகற்றும் நடவடிக்கைகளில் இராணுவம்!