இன்று இடம்பெற்ற கோர விபத்து! பயணிகள் நிலை என்ன?

இன்று (10) 2 பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டியவில் இருந்து இரத்தினபுரி புதிய நகரத்திற்கு அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று இரத்தினபுரி மற்றும் தெனியாயவில் இருந்து வந்த தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானது.

பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் பெல்வாடிய பிரதேசத்தில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி மற்றும் தெனியாயாவிலிருந்து வந்த தனியார் பேருந்தில் பயணித்தவர்களே அதிகளவான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleநாளைமுதல் அமுலாகும் நடைமுறை; வெளிநாடு செல்வதில் புதிய தடை!
Next articleயாழில் இன்று பகல் அரங்கேறிய பகீர் சம்பவம் !