கைலாசாவில் வேலைவாய்ப்பு இலங்கையர்களை அழைக்கும் நித்தியானந்தா!

இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் வேலையின்மை காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மறுபுறம், பல்வேறு பலாத்கார வழக்குகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போன நித்யானந்தா, வேறு ஒரு தீவில் கைலாசம் என்ற குட்டி நாட்டை உருவாக்கி, அங்கிருந்து தனது பணியை மேற்கொண்டு வருகிறார்.

அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலம் தோன்றி தனது பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவுகளை வழங்கி கைலாச நாணயம், கைலாச பாஸ்போர்ட், கைலாச முத்திரை என பல்வேறு புதிய மாற்றங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் கைலாசத்தில் வேலைவாய்ப்பு என தனது முகநூல் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாஷ் கிளைகளில் தகுதியான சம்பளத்துடன் வேலை வாய்ப்பு!

உதவித்தொகையுடன் (சம்பளத்துடன்) ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு வெளிநாட்டு கைலாசத்தில் வேலைவாய்ப்பு!

1) நித்யானந்தா இந்து பல்கலைக்கழகம்

2) கைலாசத்தின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆலயங்கள்

3) கைலாஷ் ஐடி பிரிவு

4) கைலாஷ் வெளிநாட்டு தூதரகம்

5) பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல்ஸ்

மற்றும் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு

உணவு, மருத்துவ வசதி, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.