மட்டக்களப்பில் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் – சோகத்தில் மூழ்கிய கிராமம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுதாகரன் சூரியகுமார் என்ற 20 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை குறித்த இளைஞரின் வீட்டுக்கு முன்பாக உள்ள பாழான நிலத்தில் நீரில் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் விசேட தேவையுடைய இளைஞன் எனவும் குறித்த இளைஞனுக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும் மேற்படி இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleநடிகை நிக்கி கல்ராணி கர்ப்பம்? வாழ்த்து மழையில் ஜோடி !
Next articleயாழில் குளத்தில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு !