வவுனியாவில் 16 வயது தங்கையுடன் உடல் உறவு வைத்த அண்ணன் கைது!!

வவுனியாவில் சகோதரியை வன்புணர்வுக்கு ஈடுபடுத்திய சகோதரனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று வவுனியா பட்டக்காடு பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு 16 வயதுடைய தங்கையையே இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாக்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தந்தையின்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையிலிருந்த தங்கையை சகோதரன் வன்முறைக்கு உட்படுத்தி உள்ளான்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 26 வயதுடைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Previous articleவவுனியாவில் சாரதி பயிற்சி வாகனம் விபத்து !
Next articleஇலங்கையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!