நீர்க்கட்டணம் செலுத்தாத 2000 பேருக்கு எதிராக வழக்கு

நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 2000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு உரிய கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர் நுகர்வோர்களால் பத்து கோடி ரூபாய்வரை செலுத்த வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

அரசியல்வாதிகள் , அரச நிறுவனங்கள், வர்த்தக ஸ்தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களுடன் தொடர்புடையவர்களும் நீர்க் கட்டணத்தைச் செலுத்தத் தவறியவர்களில் அடங்குவர்.

ஐந்து முதல் ஆறு லட்சம் வரையிலான பில்களை செலுத்தத் தவறியவர்களும் இந்தக் குழுவில் உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிடுகிறது. மேற்படி கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு ஏற்கனவே துண்டிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
Next articleதமிழர் பகுதியில் நீரில் மூழ்கி சிறுமி பலி